Labels

Thursday, July 12, 2012

32. ஐரோப்பாவில் காஃபி, Coffee in Europe,







இந்தியாவில் விளையும் காப்பிச் செடிகள் இரு வகைப் படும்; அராபிக்காvum ரோபஸ்ட்டாvum. அராபிக்கா இன்ஸ்டண்ட் காஃபிக்கும் ரோபஸ்ட்டா மற்ற டிக்கா(க்)ஷன் வகையறாவுக்கும் உபயோகப்படுகிறது.

பாரீஸில் மியூசியத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் 7 யூரோ (500 ரூ )கொடுத்து 4 எஸ்ப்ரெஸ்ஸோ ஆர்டர் கொடுத்துவிட்டுக் காத்திருந்தேன். 50 மிலி ஐஸ் கிரீம் கப்புகள் 4 தந்தாள். ட்ரேயை வாங்கிகொண்டு பெரிய கப்பு, சீனி, பால் எல்லாம் தருவாள் என்று காத்திருந்தேன். ஆனால் அந்தப் பெண்ஓகே நெக்ஸ்ட்என்றாள்ஒன்றும் புரியவில்லை. எடுத்துக் கொண்டு போய் மற்றவர்கள் உட்கார்ந்திருந்த டேபிளில் வைத்து விட்டு உட்கார்ந்தேன். எல்லாரும் என்னை ஒரு மாதிரியாக, ஒரே மாதிரி பார்த்தார்கள்? என் மனைவிகாப்பி எங்கேஎன்றாள். ”உள்ளே பாருஎன்றேன். பால்? என்று கேட்டார்கள். நான் மறுபடி கவுண்டரில் போய் பால் கேட்டபோது 50 ஸெண்ட்ஸ் என்றாள். பிறகு பாலைத் தந்து விட்டு பணம் வேண்டாமென்று விட்டாள். என்னைப் பார்க்க பாவமாயிருந்திருக்கும்போல?

டாக்டரின் கொழுந்தியாள், லண்டனில் வசிப்பவர்  “ நீங்க கப்புச்சினோ என்று கேட்டிருக்க வேண்டும்என்றார்.

ஐரோப்பாவில் காஃபியின் வகை எத்தனையோ எஸ்ப்ரெஸ்ஸோ, கப்புச்சினோ, லாட், மோக்கா இன்னும் உண்டு. எல்லாமே மெஷினில் கொதிக்க வைத்து உடன் காஃபி பால் எல்லாமே ஸ்டீமில் நல்ல பிரஷருடன் மிக்ஸ் ஆகி வரும்.

எஸ்ப்ரஸ்ஸோ, (espresso): 6 கிராம் அளவு வறுத்த ரோபஸ்ட்டா பவுடர் சுமார் 50 மிலி வெந்நீரில் பிரஷரில் குழம்பாகி கெட்டியாக ஸ்ட்ராங்காக மெஷினில் வரும். மேலே பிரவுன் கலரில் ஃபோம் வரும். சீனி இருக்கும். இந்த மாதிரி  சைஸ்ல கப் நீங்க எங்கேயும் பார்த்திருக்க மாட்டீங்க. அமெரிக்கா கப்பு டாப்புன்னா யூரோப் கப்பு ட்ராப்புதான்! விலை சுமார் 1.75 யூரோ, 125 ரூபாய்தான்! அமெரிக்கா கப்புல காப்பி குடிசே களைச்சுருவம். யூரோப்ல (எஸ்ப்ரெஸ்ஸோ) கப்புதான் 50 mm,  கீர்த்தியோ பெரிது! துளி துளியாகத்தான் குடிக்க வேண்டும். (no milk)

கப்புச்சினோ, (cappuccino) = எஸ்ப்ரெஸ்ஸோ + பால் ஆவி? (steamed milk) + நுரை (foam) எல்லாம் சம அளவில் கலந்தது.

ஸுரிச்சில் ஒருவர் கப்புச்சினோ என்று டோக்கன் வாங்கிவிட்டு காஃபி கவுண்டரில்ஒன்லி காஃபிஎன்று கேட்டு வாங்கி, பாலை அவர் வாங்கி ஊற்றிக் கொண்டார். சீனி அல்லது ஸாச்சரின் தேவையான அளவு எடுத்துக் கொள்ளலாம். அதுதான் நம்ம காஃபி.

மோக்கா, (mocha) = எஸ்ப்ரெஸ்ஸோ + சாக்லேட் பால் ஆவி?!

லாட், (latte) = எஸ்ப்ரெஸ்ஸோ + நிறைய பால் ஆவி

நரசுஸ்  3 இன் 1 காஃபி 3 ரூபாய்தான். நல்ல ஃப்ளாஸ்க்கில் ஹோட்டல் ரெஸ்டாரண்டில் வெந்நீர் வாங்கி எடுத்துச் செல்வது நல்லது. ஆஹா பேஷ் பேஷ்.

No comments:

Post a Comment